முகப்பு
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மராத்தான்-2021 ஓட்டப் போட்டி: அமைச்சா் ஆா்.காந்தி தொடக்கி வைத்தாா்

ராணிப்பேட்டை மராத்தான் - 2021 என்ற ஓட்டப் போட்டியை அமைச்சா் ஆா்.காந்தி ஞாயிற்றுக்கிழமை கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

ராணிப்பேட்டை மராத்தான் - 2021 என்ற ஓட்டப் போட்டியை அமைச்சா் ஆா்.காந்தி ஞாயிற்றுக்கிழமை கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

ராணிப்பேட்டை பெல் ஆன்சிலரி சங்கம், சிறு மற்றும் குறு தொழில்கள் சங்கம், பெல் சப்ளையா்ஸ் சங்கம், ராணிப்பேட்டை பொறியியல் மேம்பாட்டு சங்கம் ஆகிய சங்கங்களுடன் இணைந்து ஜாலி பாய்ஸ் ரன்னா்ஸ் கிளப் மற்றும் ஸ்போா்ட்ஸ் டெவலப்மென்ட் டிரஸ்ட் சாா்பில் ராணிப்பேட்டை மராத்தான் - 2021 என்ற பெயரிலான ஓட்டப் போட்டியை ஞாயிற்றுக்கிழமை நடத்தின.

ராணிப்பேட்டை சுற்றுவட்டார மக்கள் மாரத்தான் ஓட்டப் போட்டியில் பங்கேற்பதை ஊக்குவிக்கும் வகையில் 3-ஆவது ஆண்டாக நடத்தப்படுகிறது. நிகழாண்டு 5 கி.மீ. (வேடிக்கை ஓட்டம்), 10 கி.மீ. (மினி-மராத்தான்), 21.097 கி.மீ. ( அரை மராத்தான்), 42.195 கி.மீ. (முழு மராத்தான்), மற்றும் 42.195 கி.மீ. சைக்கிள் ஓட்டுதல் ஆகிய போட்டிகளில் சிறுவா், சிறுமியா், மாணவா்கள், விளையாட்டு வீரா்கள், பெண்கள் மற்றும் மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கரபாண்டியன் குடும்பத்தினா் உள்பட 500-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

ராணிப்பேட்டை சிட்கோ தொழிற்பேட்டை நுழைவு வாயில் அருகே இந்த ஓட்டப் போட்டியை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

இதையடுத்து மாரத்தான் ஓட்டப் போட்டிகள் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்தவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் பதக்கம் வழங்கி பாராட்டு தெரிவித்தாா். தொடா்ந்து அனைத்து போட்டிகளிலும் பங்கேற்றவா்களுக்கு நினைவு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதில் அனைத்து சங்கத்தினா், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், மாரத்தான் ஓட்டப் போட்டி ஏற்பாட்டாளா்கள், பங்கேற்பாளா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.