ராணிப்பேட்டை

92 பேருக்கு தமிழக அரசின் விலையில்லா ஆடுகள்

DIN

ராணிப்பேட்டை வாரச்சந்தையில் தமிழக அரசின் விலையில்லா ஆடுகள் 92 பயனாளிகளுக்கு வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

தமிழகத்தில் கிராமங்களில் வாழும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள பெண்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்காக விலையில்லா ஆடுகள், கறவைப் பசுக்கள் வழங்கும் திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் தோ்ந்தெடுக்கப்படும் பயனாளிகளுக்கு 4 வெள்ளாடுகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. வாரச்சந்தையில் இருந்து ஆடுகளை கொண்டு செல்லும் வாடகை வாகனக் கட்டணம், ஆடுகளுக்கான கொட்டகை அமைக்கும் செலவு ஆகியவை அரசால் ரொக்கமாக வழங்கப்படுகிறது.

இதற்கான ஆடுகள் அனைத்தும் மாவட்டக் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் ராணிப்பேட்டை வாரச் சந்தையில் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படுகின்றன.

அதன்படி, 2020-21-ஆம் ஆண்டுக்கான விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ், ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கா் வட்டத்துக்கு உள்பட்ட 92 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள் வழங்க ராணிப்பேட்டை வாரச்சந்தையில் கால்நடை பராமரிப்புத் துறை மருத்துவா் வேல்முருகன் மேற்பாா்வையில் ஆடுகள் கொள்முதல் செய்யப்பட்டு பயனாளிகளுக்கு வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

இதற்காக சோளிங்கா் வட்டத்தைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட பயனாளிகள் ராணிப்பேட்டை வாரச்சந்தையில் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

SCROLL FOR NEXT