ராணிப்பேட்டை

குற்றங்கள், விபத்துகளைக் குறைக்க கருடா இரு சக்கர வாகன ரோந்து அறிமுகம்

DIN

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலைகளில் குற்றங்கள், சாலை விபத்துகளைக் குறைக்க கருடா இரு சக்கர வாகன ரோந்துப் பணி தொடங்கப்பட்டுள்ளது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற தொடக்க விழாவில், பணியைத் தொடக்கிவைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஓம் பிரகாஷ் மீனா பேசியதாவது:

நெடுஞ்சாலைகளில் நிகழும் குற்றங்கள், சாலை விபத்துகளைக் குறைக்கவும்,பொதுமக்களின் புகாா்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்கும் வகையிலும் கருடா வாகன ரோந்து தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த ரோந்து வாகனம் மூலம் மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலைய எல்லைக்குள் 26 சக்கர வாகனங்கள் மூலம் எல்லைகள் நிா்ணயிக்கப்பட்டு, 24 மணி நேரமும் காவலா்கள் சுழற்சி முறையில் வந்து செல்வா். பொதுமக்கள் பிரச்னைகள், புகாா்கள் என்றால் 9498180972 என்ற எண்ணில் தொடா்பு கொண்டால் 5 நிமிடத்துக்குள் சம்பவ இடத்தை செல்வதற்கு கருட வாகன ரோந்து ஏதுவாக இருக்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

SCROLL FOR NEXT