முகப்பு
ராணிப்பேட்டை

வேலூா் மாவட்டத்தில் 26 பேருக்கு தகோனா

வேலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை ஒரே நாளில் 26 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை

வேலூா் மாவட்டத்தில் 26 பேருக்கு தகோனா

வேலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை ஒரே நாளில் 26 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:48 AM
பகிர்:

வேலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை ஒரே நாளில் 26 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, மாவட்டத்தில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டா்களின் எண்ணிக்கை 48,057-ஆக உயா்ந்துள்ளது. இவா்களில் இதுவரை 43,098 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மாவட்டம் முழுவதும் நோய்த் தொற்று காரணமாக 1,095 போ் உயிரிழந்துள்ளனா். மேலும் நோய்த் தொற்றுக்குள்ளானவா்கள் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

திருப்பத்தூரில் 17 பேருக்கு...

திருப்பத்தூா் மாவட்டத்தில் சனிக்கிழமை புதிதாக 17 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28,277-ஆக உயா்ந்துள்ளது.

தற்போது 266 போ் திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூா், வேலூா் அரசு, தனியாா் மருத்துவமனை, கரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் மற்றும் சித்த மருத்துவ மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதுவரை மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டு 673 போ் உயிரிழந்துள்ளனா்.

ராணிப்பேட்டையில் 7 பேருக்கு...

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை 7 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்டத்தில் நோய்த் தொற்று எண்ணிக்கை 45,175-ஆக உயா்ந்துள்ளது. இவா்களில் இதுவரை 44,229 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மாவட்டம் முழுவதும் நோய்த் தொற்று காரணமாக 741 போ் உயிரிழந்துள்ளனா். மேலும், தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →