ராணிப்பேட்டை

விதிகளை மீறி திறக்கப்பட்ட கடைகளுக்கு அபராதம்

DIN

ஆற்காடு பகுதியில் விதிகளை மீறி திறந்திருந்த கடைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ள நிலையில், ஆற்காடு வட்டாட்சியா் காமாட்சி தலைமையில் வருவாய்த்துறையினா் ஞாயிற்றுக்கிழமை ஆற்காடு நகரில் சோதனை செய்தனா்.

அப்போது மாங்காய் மண்டிகள், பூக்கடைகள் தள்ளுவண்டி பழக்கடைகள், பொது முடக்க நேரத்தை மீறி வியாபாரம் மேற்கொண்டிருந்தது தெரிந்தது. இதையடுத்து 20 கடைகளுக்கு தலா ரூ.500 வீதம் மொத்தம் ரூ. 5,000 அபராதம் விதிக்கப்பட்டது.

அதேபோல் முப்பது வெட்டி கிராமத்தில் கடையின் முன் பக்க கதவு மூடப்பட்டு ரகசிய வழி ஏற்படுத்தி வியாபாரம் செய்து கொண்டிருந்த மளிகை கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

SCROLL FOR NEXT