முகப்பு
ராணிப்பேட்டை

பாலாற்றில் தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை: அமைச்சர் ஆர். காந்தி

இந்த ஆட்சியில் விவசாயத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று அமைச்சர் ஆர் காந்தி தெரிவித்தார். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
தெங்கால் கிராம பொன்னை ஆற்றுப் பாசன கால்வாய் தூர்வாரும் பணியை துவைக்கிவைத்த கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி.
பகிர்:

இந்த ஆட்சியில் விவசாயத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று அமைச்சர் ஆர் காந்தி தெரிவித்தார். 
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டம், தெங்கால் கிராம பொன்னை ஆற்றுப் பாசன கால்வாய் தூர்வாரும் பணியை கைத்தறி மற்றும் துணிநூல் துறை
 அமைச்சர் ஆர். காந்தி துவக்கி வைத்து பேசியதாவது, தெங்கால் கிராம பாசன கால்வாயை கிராம மக்களே தாங்கள் சொந்த செலவில் தூர்வார முயற்சி செய்தனர். அதற்கு வட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய் துறையினர் ஆட்சேபம் தெரிவித்துள்ளார். 
இதையடுத்து தென்கால் கிராம ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் டி.சி.பத்மநாபன் தலைமையில் கிராம மக்கள் என்னிடம் நேரில் வந்து தகவல் தெரிவித்தனர். 
அதன்பேரில் உடனடியாக பொதுப்பணித்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு மேற்கண்ட கிராம பாசன கால்வாயை தூர்வார வேண்டும் என அறிவுறுத்தினேன். அதன்பேரில் உடனடியாக பொதுப்பணித்துறையினர் கால்வாய் தூர்வாரும் பணியை துவக்கியுள்ளனர். அதேபோல் பாலாறு மற்றும் பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் என கடந்த சில ஆண்டுகளாக சட்டமன்றத்தில் வலியுறுத்தி வந்தேன். 
இந்த நிலையில் இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் எடுத்துக்கூறி வருகிற சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே பாலாறு மற்றும் பெண்ணையாற்றின் குறுக்கே 15 இடங்களில் தடுப்பணைகள் கட்டும் திட்டம் அறிவிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஆட்சியில் விவசாயத்துக்கு தான் முன்னுரிமை அளிக்கப்படும் என்றார். 
இந்த நிகழ்ச்சியில் பாலாறு வடிநில செயற்பொறியாளர் ரமேஷ், ராணிப்பேட்டை உப கோட்ட பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் விஸ்வநாதன், திமுக வாலாஜா மேற்கு ஒன்றிய செயலாளர் சேஷா வெங்கட், தெங்கால் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் டி.சி.பத்மநாபன், உழவர் பெருந்தலைவர் விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் வடகால் என் பாரதி மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கிராம பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →