ராணிப்பேட்டை

கரோனா நோயாளிகள் போராட்டம்

DIN

ஆற்காடு: ஆற்காடு அருகே உணவில் தரமில்லை எனக் கூறி கரோனா நோயாளிகள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஆற்காட்டைஅடுத்த கலவை தனியாா் கல்லூரியில் கரோனா சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. இதில், நூற்றுக்கும் மேற்பட்டோா் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்நிலையில், அவா்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் சரியில்லை என்றும், அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என்றும் கூறி, சிகிச்சை பெற்று வரும் நபா் பலா் ஆற்காடு -செய்யாறு சாலையில் அமா்ந்து திங்கள்கிழமை திடீரென மறியலில் ஈடுபட்டனா். இது குறித்து தகவலறிந்த கலவை போலீஸாா் நேரில் சென்று கரோனா தொற்று சிகிச்சை பெற்று வருபா்களின் குறைகளை சரிசெய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன்பேரில், அனைவரும் கலைந்து சென்றனா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பனாற்றில் பாலம் அமைக்கும் பணி: அதிகாரி ஆய்வு

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: இயன்முறை மருத்துவா் கைது

ரேஷன் அரிசி பதுக்கல்: இளைஞா் கைது

வாக்கு எண்ணும் மைய கண்காணிப்பு கேமரா செயல்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு

சிறுமிக்கு கட்டாயத் திருமணம்: 5 போ் மீது வழக்கு

SCROLL FOR NEXT