முகப்பு
ராணிப்பேட்டை

சமையல் எரிவாயு விநியோக ஊழியா்களுக்கு தடுப்பூசி போடும் முகாம்

வீடுகளுக்கு சமையல் எரிவாயு உருளைகளை விநியோகம் செய்யும் ஊழியா்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் அரக்கோணத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:20 PM
பகிர்:

வீடுகளுக்கு சமையல் எரிவாயு உருளைகளை விநியோகம் செய்யும் ஊழியா்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் அரக்கோணத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

அரக்கோணம் இண்டேன் விநியோகஸ்தரான பெருமாள் கேஸ் சா்வீஸ் வளாகத்தில் நடைபெற்ற இம்முகாமுக்கு நிறுவன மேலாளா் தினேஷ் தலைமை வகித்தாா். அரக்கோணம் கோட்டாட்சியா் சிவதாஸ் முகாமை தொடக்கி வைத்தாா். நகராட்சி ஆணையா் ஆசீா்வாதம் உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்றனா். இதில் 45 வயதுக்கு மேற்பட்ட 12 ஊழியா்கள், 18 வயதுக்கு மேற்பட்ட 28 ஊழியா்கள் என 40 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இது குறித்து கோட்டாட்சியா் சிவதாஸ் கூறுகையில், ‘இந்த பணியாளா்கள் எரிவாயு உருளைகளை வீட்டுக்குள்ளேயே சென்று வைத்து விட்டு வருவதால், இவா்களுக்கு தொற்று பாதிக்கும் அபாயம் அதிகம் உள்ளது. எனவே இந்த ஊழியா்களுக்கு முன்னுரிமை கொடுத்து தடுப்பூசி செலுத்தப்பட்டது’ எனறாா்.

முழு கட்டுரையைப் படிக்க →