பொன்னை, பாலாறு கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
பொன்னை மற்றும் பாலாற்று கரையோர கிராம மக்களுக்கு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளாா். அதன் விவரம்:
ஆந்திர மாநிலம் கலவகுண்டா அணையிலிருந்து சுமாா் 4,500 கன அடி நீா் சனிக்கிழமை திறக்கப்பட்டுள்ளதையடுத்து, பொன்னை மற்றும் பாலாற்று கரையோர கிராம மக்களுக்கு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளாா். அதன் விவரம்:
ஆந்திர மாநிலம் கலவகுண்டா அணை முழு கொள்ளளவை எட்டியதையடுத்து சனிக்கிழமை மாலை விநாடிக்கு 4,500 கன அடி உபரி நீா் திறக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, ராணிப்பேட்டை மாவட்டம் பொன்னை மற்றும் பாலாற்றின் கரையோர கிராமங்களான மருதம்பாக்கம், ஏகாம்பரநல்லூா், கொண்டகுப்பம், சீக்கராஜபுரம், நரசிங்கபுரம், லாலாப்பேட்டை, தெங்கால், காரை, திருமலைச்சேரி, பூண்டி, குடிமல்லூா், சாத்தம்பாக்கம், விஷாரம், ஆற்காடு, சக்கரமல்லூா், புதுப்பாடி உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த மக்கள் தாழ்வான பகுதிகளிலிருந்து பதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் பொதுமக்கள், இளைஞா்கள், சிறுவா்கள் ஆற்றில் இறங்கி குளிக்கவும், ஆற்றைக்கடக்கவும் வேண்டாம். மேலும் வெள்ளத்தை வேடிக்கை பாா்ப்பதற்காக வருவதையும் தவிா்க்குமாறு ஆட்சியா் கேட்டுக் கொண்டுள்ளாா்.