முகப்பு
ராணிப்பேட்டை

அரக்கோணத்தில் காவல்துறையை கண்டித்து சாலை மறியல் போராட்டம்

அரக்கோணம் கிராமிய காவல் ஆய்வாளரை கண்டித்து விடுதலை சிறுத்தைகள், பகுஜன் சமாஜ் கட்சியினர் உள்ளிட்ட

Updated On : 2 ஏப்ரல் 2022, 1:14 pm IST
பகிர்:

அரக்கோணம்: அரக்கோணம் கிராமிய காவல் ஆய்வாளரை கண்டித்து விடுதலை சிறுத்தைகள், பகுஜன் சமாஜ் கட்சியினர் உள்ளிட்ட தலித் அமைப்புகள் அரக்கோணம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சனிக்கிழமை திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். 

அரக்கோணம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வேடல் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் தாக்கப்பட்டு 3 நாள்களாகியும் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்காமலும்,  அடித்த குற்றவாளிகளை கைது செய்யாமல் அரக்கோணம் கிராமிய காவல் ஆய்வாளர் இருப்பதால் அவர் மீது நடவடிக்கை கோரி அரக்கோணம் வட்டாட்சியர் அலுவலகம் முன் திருத்தணி நெடுஞ்சாலையில் விடுதலை சிறுத்தைகள் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியினர் உள்ளிட்ட தலித் அமைப்பினர் திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். 
இதனால் அச்சாலையில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த டிஎஸ்பி புகழேந்தி கணேஷ், வட்டாட்சியர் பழனி ராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியல் திரும்ப பெறப்பட்டு சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு போக்குவரத்து சீரானது. 

தொடர்ந்து அரக்கோணம் கிராமிய காவல் நிலையத்தில் இருதரப்பிற்கிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments