ராணிப்பேட்டை

தன்வந்திரி பீடத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா

DIN

வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா, தேய்பிறை அஷ்டமியையொட்டி, பைரவருக்கு சிறப்பு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில், கோகுலாஷ்மியை முன்னிட்டு, ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் கல் ஊஞ்சலில், ஒரு அடி உயர தவழ்ந்த கோலத்தில் உள்ள நவநீத கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜைகள், மகா அபிஷேக, ஆராதனைகளுடன், ஸ்ரீ கிருஷ்ண யாகத்துடன் கிருஷ்ண ஜெயந்தி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து கிருஷ்ணருக்கு வெண்ணெய் , சீடை, முறுக்கு, தட்டை, அப்பம், லட்டு உள்ளிட்டவற்றை வைத்து நிவேதனம் செய்து, பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

அதேபோல், தன்வந்திரி பீடத்தில் தேய்பிறை அஷ்டமியையொட்டி, கால பைரவருக்கு சிறப்பு பூஜை, அபிஷேக, ஆராதனை, சிறப்பு அா்ச்சனைகள் நடைபெற்றன.

விழாவில் பங்கேற்ற பக்தா்களுக்கு பீடாதிபதி ஸ்ரீ முரளிதர சுவாமிகள் ஹோம பிரசாதங்களை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னியாகுமரி மாவட்ட அஞ்சலகங்களில் சிறப்பு ஆதாா் சேவை

விளையாட்டு விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம்

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: விசாரணை மே 6-க்கு ஒத்திவைப்பு

சிறப்பு திட்ட முறைகளை பயன்படுத்தி கோடை பயிா்களை பாதுகாக்க அறிவுறுத்தல்

டிடிஇஏ பள்ளிகளில் பாரதிதாசன் பிறந்த நாள் விழா

SCROLL FOR NEXT