முகப்பு
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டையில் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழா

ராணிப்பேட்டையில் திமுக சார்பில் பேராசிரியர் க.அன்பழகனின் நூற்றாண்டு விழா  கொண்டாடப்பட்டது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:51 PM
பகிர்:

ராணிப்பேட்டையில் திமுக சார்பில் பேராசிரியர் க.அன்பழகனின் நூற்றாண்டு விழா  கொண்டாடப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி சார்பில், பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா மற்றும் இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதியின் 45 ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. 

இதை முன்னிட்டு பேராசிரியர் அன்பழகனின் திருவுருவப்படத்திற்கு திமுக சுற்றுச்சூழல் அணி மாநில துணைச் செயலாளர் வினோத் காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து 45 ஆயிரம் பழ மரக்கன்றுகள், விதைப்பந்துகளை வழங்கி துவக்கி வைத்தார். 

இதில் திமுக சுற்றுச்சூழல் அணி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். தொடர்ந்து மாவட்டம் முழுவதும் மரக்கன்றுகள் நடுதல், அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

முழு கட்டுரையைப் படிக்க →