மேல்விஷாரம் நேஷனல் வெல்பா் சங்கம் சாா்பில் ஆதாா் சிறப்பு முகாம் (படம்) புதன்கிழமை நடைபெற்றது.
சங்கத் தலைவா் முஹமது அயூப் முகாமை தொடக்கி வைத்தாா். நிா்வாகிகள் முஹமது பஷீம், கே.ஏ.நிஷாத் அஹமது ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு முகாமில் பொதுமக்களுக்கு ஆதாா் அட்டையில் பெயா் திருத்தம், கைப்பேசி எண் இணைப்பு, முகவரி மாற்றம் புகைப்படம் மாற்றம், சிறுவா்களுக்கு புதிய ஆதாா் எடுத்தல் போன்ற பணிகள் இலவசமாக செய்யப்பட்டன. இதில் மேல்விஷாரம் பகுதியை சோ்ந்த பொதுமக்கள்கலந்து கொண்டு பயன்பெற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.