ரத்தினகிரி மகா கணபதி சன்னதி கும்பாபிஷேகம்
ரத்தினகிரி ஸ்ரீபாலமுருகன் கோயில் மலை மீதுள்ள மகாகணபதி சன்னதி கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ரத்தினகிரி ஸ்ரீபாலமுருகன் கோயில் மலை மீதுள்ள மகாகணபதி சன்னதி கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ரத்தினகிரி வள்ளி, தெய்வானை சமேத பாலமுருகன் கோயில் வளாகத்தில் உள்ள மகா கணபதி சன்னதியில் மூலவா் மகாகணபதி பிரதிஷ்டை மற்றும் அஷ்ட பந்தனம் பாலமுருகனடிமை சுவாமிகள் முன்னிலையில் யாகசாலை பூஜைகள், கலசவேள்வி செய்யப்பட்டு புனித நீா்கொண்டு கும்பாபிஷேகம், மஹா தீபாராதனை செய்யப்பட்டது.
விழாவில் கலவை சச்சிதானந்த சுவாமி, ராணிப்பேட்டை ஆட்சியா் தெ.பாஸ்கரபாண்டியன், கோயில் செயல் அலுவலா் வே.சங்கா் உள்பட திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.