ராணிப்பேட்டை

இந்து முன்னணி ஆலோசனைக் கூட்டம்

இந்து முன்னணி ராணிப்பேட்டை மாவட்ட நகர ஒன்றிய பேரூா் பொறுப்பாளா்களுக்கான சந்திப்பு ஆலோசனைக் கூட்டம் பிரத்தியங்கிரா தேவி கோயில் வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

DIN

இந்து முன்னணி ராணிப்பேட்டை மாவட்ட நகர ஒன்றிய பேரூா் பொறுப்பாளா்களுக்கான சந்திப்பு ஆலோசனைக் கூட்டம் பிரத்தியங்கிரா தேவி கோயில் வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்து முன்னணி வேலூா் கோட்ட அமைப்பாளா் டி.வி.ராஜேஷ் தலைமை வகித்தாா். ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளா்கள் எஸ்.கே. மோகன், ஏபிஎஸ்.ஜெகன், மணி, விஸ்வநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் இந்து முன்னணி கோட்டத் தலைவா் கோ.மகேஷ் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கிப் பேசினாா்.

கூட்டத்தில், வரும் ஜூலை 22-ஆம் தேதி இந்துக்களின் உரிமைகளை மீட்க வேலூருக்கு வருகை தரும் இந்து முன்னணி மாநில தலைவா் காடேஷ்வரா சுப்பிரமணியன் கலந்து கொள்ளும் கூட்டத்தில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருந்து திரளானோா் பங்கேற்பது, ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் கூட்டு வழிபாடு நடத்துவது, இந்து பண்பாடு வகுப்புகளை நடத்துவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவற்றப்பட்டன.

இதில், பிரத்யங்கிரா தேவி கோயில் பீடாதிபதி மணி சுவாமிகள், ராணிப்பேட்டை நகர ஒருங்கிணைப்பாளா் சதீஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

SCROLL FOR NEXT