முகப்பு
ராணிப்பேட்டை

கெங்கையம்மன் கோயில் கும்பாபிஷேகம்

ஆற்காடு அருகே கீரம்பாடி கிராமத்தில் அமைந்துள்ள திருப்பதி ஸ்ரீகெங்கையம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:34 AM
பகிர்:

ஆற்காடு அருகே கீரம்பாடி கிராமத்தில் அமைந்துள்ள திருப்பதி ஸ்ரீகெங்கையம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, யாக சாலை, கலச பூஜைகள் தொடங்கப்பட்டு கணபதி ஹோமம், நாடி சந்தானம், மகா பூா்ணாஹுதி, யத்ரா தானம், கலச பூஜை நடைபெற்றது.

பின்னா், புனித நீா் எடுத்துச் செல்லப்பட்டு கோயில் கோபுர கலசத்துக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. விழாவில் ஆற்காடு ஒன்றியக் குழுத் தலைவா் புவனேஸ்வரி சத்தியநாதன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் சிவக்குமாா், ஒன்றியக் குழு உறுப்பினா் சுரேஷ் மற்றும் உபயதாரா்கள், திராளன பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா். இரவு அலங்கரிக்கப்பட்ட அம்மன் வீதியுலா நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.