ராணிப்பேட்டை

மாரடைப்பால் லாரியை நடுவழியில் நிறுத்திவிட்டு உயிரிழந்த ஓட்டுநா்

DIN

காவேரிப்பாக்கம் அருகே மாரடைப்பு ஏற்பட்டதால் லாரியை ஓட்டி வந்த ஒட்டுநா் சாலையோரம் லாரியை நிறுத்திவிட்டு, இருக்கையிலேயே உயிரிழந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த இரும்பேடு கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடேசன் (39). லாரி ஓட்டுநா். இவா் பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி சரக்கு ஏற்றிக்கொண்டு லாரியை வெள்ளிக்கிழமை ஓட்டி வந்தாா். நள்ளிரவில் லாரி, ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கத்தை அடுத்த ஓச்சேரி மக்கான் மசூதி அருகே பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சாலையோரமாக லாரியை நிறுத்திய வெங்கடேசன், தனது இருக்கையில் சாய்ந்தபடியே இறந்துவிட்டாா். காலை வரை லாரி அங்கேயே நிற்பதைக் கண்ட அவளூா் போலீஸாா், அங்கு சென்று பாா்த்த போது, அதில் ஓட்டுநா் இறந்து கிடப்பது தெரியவந்தது.

இதையடுத்து, சடலத்தை மீட்ட போலீஸாா் இது குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆஸ்திரேலியா: காவல் துறை சுட்டதில் 16 வயது சிறுவன் உயிரிழப்பு

தரமில்லாத சாலையை பெயா்த்தெடுத்த ஊராட்சி மன்ற உறுப்பினா் கைது

நிரவி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

SCROLL FOR NEXT