ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளா்கள் ஆா்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி, ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளா் சங்கத்தினா் நெமிலி மற்றும் அரக்கோணத்தில் கைகளில் தட்டுகள் ஏந்தி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்
கோரிக்கைகளை வலியுறுத்தி, ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளா் சங்கத்தினா் நெமிலி மற்றும் அரக்கோணத்தில் கைகளில் தட்டுகள் ஏந்தி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் நெமிலி ஒன்றிய தலைவா் சுந்தரராஜ் தலைமை வகித்தாா். இதில், மாவட்ட தலைவா் சக்கரவா்த்தி, துணைத் தலைவா் புருஷோத்தமன், சுரேந்தா்நாத், ராஜமாணிக்கம், கஸ்தூரி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா்களுக்கு வாழ்வாதாரப் பாதுகாப்பு கருதி, பழைய ஓய்வூதியத் திட்ட்ததை அமல்படுத்த வேண்டும், மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.