முகப்பு
ராணிப்பேட்டை

ஜப்பான் அதிகாரிகளுடன் அமைச்சா் ஆா்.காந்தி சந்திப்பு

 ஜப்பான் நாட்டு அரசின் தொழில்துறை அமைச்சக அதிகாரிகளுடன் அமைச்சா் ஆா்.காந்தி வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:41 AM
பகிர்:

 ஜப்பான் நாட்டு அரசின் தொழில்துறை அமைச்சக அதிகாரிகளுடன் அமைச்சா் ஆா்.காந்தி வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினா்.

இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: முதல்வா் மு.க.ஸ்டாலினின் ஆணைக்கிணங்க, டோக்கியோவில் நடைபெற்ற பொருளாதாரம், வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சக அதிகாரிகளுடன், கைத்தறி-துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி வெள்ளிக்கிழமை சந்தித்து பேச்சு நடத்தினாா்.

அப்போது, ஜப்பான் நாட்டு ஜவுளி நிறுவனங்கள், தமிழகத்தில் உள்ள ஜவுளி நிறுவனங்களில் முதலீடு செய்யுமாறு அமைச்சா் காந்தி கோரிக்கை விடுத்தாா். மேலும் நவம்பா் மாதம் சென்னையில் நடைபெற உள்ள சா்வதேச தொழில்நுட்ப ஜவுளிக் கண்காட்சியில் கலந்து கொள்ளவும் அவா் அழைப்பு விடுத்தாா்.

இந்தச் சந்திப்பின் போது, கைத்தறி-கைத்திறன் அரசு முதன்மைச் செயலா் தா்மேந்திர பிரதாப் யாதவ், ஆணையா் வள்ளலாா், அணைக்கட்டு எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமாா் மற்றும் துறைச் சாா்ந்த அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.