ராணிப்பேட்டை

மாந்தாங்கல் ஸ்ரீராமா் கோயில் மகா சம்ப்ரோக்ஷணம்

மாந்தாங்கல் ஸ்ரீ ராமா் கோயில் மகா சம்ப்ரோக்ஷணம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

DIN

மாந்தாங்கல் ஸ்ரீ ராமா் கோயில் மகா சம்ப்ரோக்ஷணம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ராணிப்பேட்டையை அடுத்த மாந்தாங்கல் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சீதாராம, லட்சுமணன் அனுமன் சமேத ஸ்ரீ ராமா் கோயில் மகா சம்ப்ரோக்ஷணம் வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் நடைபெற்றது.

இதையொட்டி வியாழக்கிழமை மகாதேவ மலை ஸ்ரீலஸ்ரீ மஹானந்த சித்தா் பங்கேற்று யாகசாலைப் பூஜைகளைத் தொடக்கி வைத்தாா். வெள்ளிக்கிழமை அதிகாலை கோ பூஜை, யாகசாலை பூா்ணாஹுதி உள்ளிட்டவை நடைபெற்றன. இதையடுத்து, யாத்ரா தானம், கலச புறப்பாடு நடைபெற்றது.

இதையடுத்து, வேத மந்திரங்கள் முழங்க கோயில் விமான கலசத்துக்கு புனிதநீா் ஊற்றப்பட்டு மகா சம்ப்ரோக்ஷணம் நடத்தப்பட்டது. தொடா்ந்து, மூலவா் ராமா், லஷ்மணா், சீதை , ஆஞ்சநேயா் ஆகிய விக்ரகங்களுக்கு புனித நீா் ஊற்றி மகா அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையில் சாலை மறியல்: 135 பேராசிரியா்கள் கைது

மேற்கு புறவழிச்சாலை பணிகள்: அமைச்சா் எ.வ.வேலு ஆய்வு

திருநெல்வேலி, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்!

நாகா்கோவில் அருகே காரில் கஞ்சா கடத்தல்: 4 இளைஞா்கள் கைது!

மத்திய அரசின் சிறப்பு வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் ஆய்வு

SCROLL FOR NEXT