முகப்பு
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டையில் காவல் துறை பல் பொருள் அங்காடி: டிஜிபி சைலேந்திர பாபு காணொலியில் திறந்து வைத்தாா்

ராணிப்பேட்டை ஆயுதப் படை வளாகத்தில் காவல் துறை பல்பொருள் அங்காடியை தமிழக காவல் துறை இயக்குநா் சைலேந்திரபாபு காணொலி காட்சி வாயிலாக வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:20 AM
ராணிப்பேட்டை ஆயுதப் படை வளாகத்தில், காவல் துறை பல்பொருள் திறப்பு  விழாவில் கலந்துகொண்ட மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்  தீபா  சத்யன்.
பகிர்:

ராணிப்பேட்டை ஆயுதப் படை வளாகத்தில் காவல் துறை பல்பொருள் அங்காடியை தமிழக காவல் துறை இயக்குநா் சைலேந்திரபாபு காணொலி காட்சி வாயிலாக வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

ராணிப்பேட்டை புதிய மாவட்ட ஆயுதப் படை வளாகத்தில், காவல் துறையினருக்கான பல்பொருள் அங்காடி திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

காவல் துறை இயக்குநா் சைலேந்திரபாபு காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தாா்.

விழாவில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தீபா சத்தியன் கலந்துகொண்டு, பல்பொருள் அங்காடியை குத்துவிளக்கேற்றி முதல் விற்பனையைத் தொடக்கி வைத்தாா்.

கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் (தலைமையிடம்) விஸ்வேஸ்வரய்யா, இணையவழி குற்றப் பிரிவு முத்து கருப்பன், உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளா்கள் பிரபு (ராணிப்பேட்டை), பிரபு (அரக்கோணம்), ராணிப்பேட்டை போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளா் சீனிவாசன், ஆயுதப்படை காவல் ஆய்வாளா் சதீஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.