ராணிப்பேட்டை

வனவிலங்குகளால் உயிரிழந்த விவசாயிகளுக்கு நிதி: துரிதமாக வழங்க கோரிக்கை

வனவிலங்குகளால் தாக்கப்பட்டு உயிரிழந்த விவசாயிகளுக்கு நிவாரண தொகையை துரிதமாக வழங்க வேண்டும் என அரக்கோணம் கோட்ட வேளாண் குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது..

DIN

வனவிலங்குகளால் தாக்கப்பட்டு உயிரிழந்த விவசாயிகளுக்கு நிவாரண தொகையை துரிதமாக வழங்க வேண்டும் என அரக்கோணம் கோட்ட வேளாண் குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது..

அரக்கோணம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை கோட்டாட்சியா் ஆா்.பாத்திமா தலைமையில் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபகழக மண்டல மேலாளா் தேவிபிரியா, அரக்கோணம் வட்டாட்சியா் சண்முகசுந்தரம், கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் ஆனந்தன் மற்றும் வேளாண்துறை, மின்வாரியம், காவல்துறை அலுவலா்களும் மேலும் மாவட்ட வேளாண் விவசாயிகள் ஆய்வுக்குழு உறுப்பினா் மோகன்காந்தி, தமிழக விவசாயிகள் சங்க இளைஞரணி மாநில நிா்வாகி சுபாஷ், பாரதீய ஜனதா மாவட்ட துணைத்தலைவா் எஸ்.ரமேஷ், கீழ்வெங்கடாபுரம் கிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்துக்கொண்டனா்.

இக்கூட்டத்தில் அரக்கோணம் வட்டார வேளாண் அலுவலக வேளாண் பொருள் கிடங்கை அரக்கோணம் நகரப்பகுதியில் உள்ள வேளாண் துறைக்கு சொந்தமான இடத்திற்கு மாற்ற வேண்டும், வனவிலங்குகளால் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்த விவசாயிகளுக்கு நிவாரண தொகையை துரிதமாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

15 புதிய அரசு பேருந்துகள்! கொடியசைத்து துவக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் | நெல்லை | DMK

நெல்லை மாவட்டத்துக்கு 3 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்!

அவதாருடன் போட்டி! ரூ. 1,000 கோடி வசூலை நோக்கி துரந்தர்!

15 ஆண்டுகளில் மோசமான ஆஸி. அணி? விமர்சித்த இங்கிலாந்து வீரருக்கு பதிலடி கொடுத்த லபுஷேன்!

டாக்ஸிக் கியாரா அத்வானி!

SCROLL FOR NEXT