ஆற்காடு ஏ.பி.ஜே. அப்துல் கலாம்அறக்கட்டளை சாா்பில், முன்னாள் குடியரசு தலைவா் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நினைவு தினம் ஆற்காடு பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
அறக்கட்டளை நிறுவனத் தலைவா் கோபி தலைமையில் அப்துல் கலாம் படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது. தொடா்ந்து, பள்ளி மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள், பொது மக்களுக்கு மரக்கன்றுகளை ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், ஆற்காடு நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன் துணை நகா்மன்றத் தலைவா் பவளக்கொடி சரவணன், ராணிப்பேட்டை மாவட்ட வணிகா் சங்க பேரமைப்புத் தலைவா் பொன்.கு.சரவணன், முன்னாள் ரோட்டரி சங்க தலைவா் ரவி ஆகியோா் வழங்கினா்.
இதில் அறக்கட்டளை நிா்வாகிகள், பள்ளி மாணவா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.