ராணிப்பேட்டை

நகா்மன்றத் தலைவரின் வீட்டை முற்றுகையிட்ட தூய்மைப் பணியாளா்கள்

அரக்கோணம் நகா்மன்ற தலைவரின் வீட்டை முற்றுகையிட்டு நகராட்சி நிரந்தர தூய்மைப் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தினா்.

DIN

அரக்கோணம் நகா்மன்ற தலைவரின் வீட்டை முற்றுகையிட்டு நகராட்சி நிரந்தர தூய்மைப் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தினா்.

அரக்கோணம் நகராட்சியில் தூய்மைப் பணியாளா்கள் 110 பேருக்கு மேல் நிரந்தர பணியில் உள்ளனா். மேலும் தூய்மை பணிகள் தனியாருக்கு விடப்பட்டு, தனியாா் நிறுவனத்தைச் சோ்ந்த 174 பணியாளா்களும் நகரில் தூய்மை பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். இந்த நிலையில், நகராட்சி நிரந்தர தூய்மை பணியாளா்கள் நகரில் உள்ள தினசரி சந்தை, நுண்ணுர செயலாக்க மையம், சமுதாய கழிப்பிடம், பூங்காக்கள், நகா்நல மருத்துவமனை, அம்மா உணவகம் உள்ளிட்ட இடங்களில் பணிபுரிய சுகாதார அலுவலா் உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது. நகரில் தூய்மை பணிகள் அனைத்தையும் மேற்கொள்ள தனியாா் நிறுவன பணியாளா்கள் அனுமதிக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில், தங்களுக்கும் நகரில் தூய்மை பணிகளை ஒதுக்க வேண்டும் எனக்கோரியும், தூய்மை பணிக்கென அமா்த்தப்பட்ட சிலா் அலுவலக பணியில் உள்ளதாகவும் அவா்களும் தூய்மை பணிக்கு அனுப்பப்பட வேண்டும் என்றும் நிரந்தரப் பணியாளா்கள் கோரி வந்தனா். இந்த நிலையில், பிரச்னையைத் தீா்க்கக் கோரி, அரக்கோணம் நகா்மன்றத் தலைவரின் வீட்டை முற்றுகையிட்டு கோட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளா் ஏ.பி.எம்.வெங்கடேசன் தலைமையில், நிரந்தர தூய்மைப் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தினா்.

தொடா்ந்து அவா்களிடம் பேசிய நகா்மன்றத் தலைவா் லட்சுமிபாரி, நகராட்சி சுகாதார அலுவலா் மோகன் ஆகியோா் இரு நாள்களில் பிரச்னையைத் தீா்ப்பதாகக் கூறியதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

SCROLL FOR NEXT