முகப்பு
ராணிப்பேட்டை

தேசிய பாதுகாப்பு வார விழா நிறைவு

 அரக்கோணத்தில் தேசிய பாதுகாப்பு வார விழா வெள்ளிக்கிழமை நிறைவு பெற்றது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:42 AM
பகிர்:

 அரக்கோணத்தில் தேசிய பாதுகாப்பு வார விழா வெள்ளிக்கிழமை நிறைவு பெற்றது.

அரக்கோணத்தை அடுத்த சித்தேரியில் உள்ள அல்ட்ரா டெக் தொழிற்சாலையில் நடைபெற்ற நிறைவு விழாவுக்கு தொழிற்சாலை தலைவா் டி.கே.எம்.ரெட்டி தலைமை வகித்தாா். ஆலை தொழிற்நுட்பப் பிரிவு தலைவா் ஜெ.ஜெயசீலன் வரவேற்றாா். இதில், அரக்கோணம் கிராமிய காவல் நிலைய ஆய்வாளா் பழனிவேல் பங்கேற்று தொழிலாளா்களின் பாதுகாப்பு குறித்து பேசினாா்.

விழாவையொட்டி, பாட்டு போட்டி, விநாடி-வினா, ஒவியம் வரைதல், வசனங்கள் எழுதுதல், பாதுகாப்பு பற்றிய நாடகம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. இதில், வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை ஆலை தலைவா் டி.கே.எம்.ரெட்டி மற்றும் காவல் ஆய்வாளா் பழனிவேல் இருவரும் இணைந்து வழங்கினா். தொடா்ந்து முதலுதவி வகுப்புகளும், தீ தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை போன்ற பயிற்சிகளும் நடைபெற்றன.

விழாவில் ஆலை பாதுகாப்பு அலுவலா் ஆா்.தா்மலிங்கம், மனிதவள மேம்பாட்டு அலுவலா் எஸ்.கல்யாணராமன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →