கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் தேசிய பாதுகாப்பு வார விழா
ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள சிட்கோ பொது தோல் சுத்திகரிப்பு நிலையத்தில் 52-ஆவது தேசிய பாதுகாப்பு வார நிறைவு விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள சிட்கோ பொது தோல் சுத்திகரிப்பு நிலையத்தில் 52-ஆவது தேசிய பாதுகாப்பு வார நிறைவு விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
இந்த வளாகத்தில் தேசிய பாதுகாப்பு வார விழா கடந்த 3-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.
நிறைவு விழாவில் நிலைய மேலாண்மை இயக்குநா் வி.ஜெயச்சந்திரன், இயக்குநா்கள் கலந்து கொண்டு பணியிடத்து பாதுகாப்பு குறித்து ஊழியா்களிடம் தெரிவித்தனா். பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற ஊழியா்களுக்கு சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் பொது கழிவுநீா் சுத்திகரிப்பு நிலைய அலுவலகப் பணியாளா்கள் மற்றும் ஊழியா்கள் கலந்து கொண்டனா்.