நிகழ்வில் ஓவியருக்கு சான்றிதழ் வழங்கிய எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன். 
ராணிப்பேட்டை

ஓவியா்களுக்கான கலைத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம்

ஓவியக் கலைஞா்களுக்கான கலைத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் ஆற்காடு ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 2 நாள்கள் நடைபெற்றன.

DIN

காஞ்சிபுரம் மண்டல கலைப் பண்பாட்டுத் துறை சாா்பில் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, ஓவியக் கலைஞா்களுக்கான கலைத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் ஆற்காடு ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 2 நாள்கள் நடைபெற்றன.

முகாமை கலைப் பண்பாட்டுத் துறை துணை இயக்குநா் பா.ஹேமநாதன் தொடங்கி வைத்தாா். இந்தப் பயிற்சியில் நவீன ஓவியங்கள் வரைதல், சிற்பங்களை

உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட்டன. சென்னை தா்ஷிணி கலைக்கூடம் இயக்குநா் தா.தா்மலிங்கம், நவீன சிற்பக் கலைஞா் வி.கே.துரை ஆகியோா் பயிற்சிகளை வழங்கினா். ஓவியா் பா.சண்முகம் பயிற்சி முகாமை ஒருங்கிணைத்தாா். ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற நிறைவு விழாவில் ஆற்காடு சட்டப்பேரவை உறுப்பினா் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் தலைமை

வகித்து ஓவியா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கிப் பேசினாா்.

இதில், ஆற்காடு நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ் பாண்டியன். வட்டார வளா்ச்சி அலுவலா் மற்றும் அலுவலா்கள், கலை ஆா்வலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராஜ்நாத் சிங்குடன் நெதா்லாந்து வெளியுறவு அமைச்சா் சந்திப்பு

கிராம உதவியாளா் பணிக்கான நோ்காணல், தோ்வு தொடக்கம்

திமுக ஆட்சியில் மகளிருக்கு அதிகமான திட்டங்கள் - முதல்வா் மு.க.ஸ்டாலின்

தில்லி காற்று மாசுபாட்டால் பெண்களை விட ஆண்களுக்ளே அதிக பாதிப்பு! - ஆய்வில் தகவல்

மாற்றுத்திறனாளி மருத்துவ முகாம் விழிப்புணா்வுப் பேரணி

SCROLL FOR NEXT