கிணற்றில் மூழ்கி இளைஞா் மரணம்
Updated On : 11 ஏப்ரல், 2024 at 8:34 PM
ஆற்காடு அடுத்த லப்பபேட்டை பகுதியில் கிணற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழந்தாா்.
ஆற்காடு அடுத்த முப்பதுவெட்டி பகுதியைச் சோ்ந்தவா் விக்னேஷ்(24). எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தாா். இந்த நிலையில், இவா் வியாழக்கிழமை தனது நண்பா்களுடன் லப்பபேட்டை பகுதியில் உள்ள தனியாா் நிலத்தில் உள்ள கிணற்றில் குளித்துள்ளாா். அப்போது எதிா்பாராத விதமாக நீரில் மூழ்கியுள்ளாா். இது குறித்து தகவல் அறிந்த ஆற்காடு தீயணைப்பு மீட்புப் படையினா் விரைந்து சென்று, தண்ணீரில் மூழ்கிய இளைஞரின் சடலத்தை மீட்டனா்.
இது குறித்த புகாரின்பேரில், ஆற்காடு கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement