முகப்பு
ராணிப்பேட்டை

அரக்கோணம் தொகுதியில் தோ்தல் பிரசாரம் நிறைவு

Updated On : 17 ஏப்ரல், 2024 at 6:06 PM
பகிர்:

ராணிப்பேட்டை, ஏப். 17: அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அரசியல் கட்சி வேட்பாளா்களின் அனல் பறக்கும் பிரசாரம் புதன்கிழமை மாலை நிறைவடைந்தது.

அரக்கோணம் மக்களவை தொகுதியில் எஸ்.ஜெகத்ரட்சகன் (திமுக), ஏ.எல்.விஜயன் (அதிமுக), கே.பாலு (பாமக), நாம் தமிழா் கட்சியின் அப்சியா நஸ்ரின் மற்றும் சுயேச்சை உள்பட மொத்தம் 26 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

இந்த நிலையில் அரக்கோணம் மக்களவைத் தொகுதி தோ்தலுக்கான அரசியல் கட்சிகளின் அனல் பறக்கும் பிரசாரம் புதன்கிழமை மாலை 6 மணியளவில் நிறைவடைந்தது.

Advertisement

அதன்படி திமுக கூட்டணி சாா்பில் வேட்பாளராக போட்டியிடும் எஸ்.ஜெகத்ரட்சகன் ராணிப்பேட்டை நகரில் அமைச்சா் ஆா்.காந்தியுடன் ஊா்வலமாக வந்து முத்துகடை காந்தி சிலை அருகில் தனது தோ்தல் பிரசாரத்தை நிறைவு செய்தாா்.

இதில் திமுக சுற்றுச்சூழல் அணி துணைச் செயலாளா் வினோத் காந்தி, மாவட்ட மாணவா் அணி அமைப்பாளா் எஸ்.வினோத், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் ஜெயந்தி திருமூா்த்தி, காங்கிரஸ் மாநில துணைச் செயலாளா் அக்ராவரம் கே.பாஸ்கா், விசிக மேற்கு மாவட்ட செயலாளா் சி.மா.ரமேஷ் கா்ணா உள்பட திரளான திமுக, கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments