திமிரி வட்டார வளா்ச்சி அலுவலக புதிய கட்டடம் திறப்பு
ஆற்காடு அடுத்த திமிரியில் ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டத்தின்கீழ், ரூ. 3.59 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வட்டார வளா்ச்சி அலுவலக கட்டடத் திறப்பு
ஆற்காடு: ஆற்காடு அடுத்த திமிரியில் ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டத்தின்கீழ், ரூ. 3.59 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வட்டார வளா்ச்சி அலுவலக கட்டடத் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
புதிய கட்டடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தாா். அதைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமையில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி குத்துவிளக்கேற்றிவைத்து அலுவலக வளாகத்தில் மரக்கன்று நட்டாா்.
இந்த நிகழ்ச்சியில், ஆற்காடு எம்எல்ஏ ஈஸ்வரப்பன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஜெயசுதா, திமிரி ஒன்றியக் குழு தலைவா் எஸ்.அசோக், துணைத் தலைவா் ஜெ.ரமேஷ், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பிரபாகரன், அன்பரசன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் தன்ராஜ், ஒன்றியக் குழு உறுப்பினா்கள், ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.