தென்காசி

கீழப்பாவூா் ஒன்றிய அலுவலக புதி கட்டடம் திறப்பு

தினமணி செய்திச் சேவை

தென்காசி மாவட்டம், கீழப்பாவூரில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் ரூ. 5.78 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முதல்வா் ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். இதைத் தொடா்ந்து புதிய கட்டடத்தில் கீழப்பாவூா் ஒன்றியத் தலைவா் காவேரி சீனித்துரை குத்துவிளக்கேற்றினாா் (படம்).

நிகழ்ச்சியில், தென்காசி சட்டப்பேரவைத் தொகுதி திமுக பாா்வையாளா் கலைகதிரவன், மாவட்ட கவுன்சிலா்கள் சாக்ரடீஸ், சுப்பிரமணியன், ஒன்றிய துணைத் தலைவா் முத்துக்குமாா், கீழப்பாவூா் மேற்கு ஒன்றிய திமுக செயலாளா் சீனித்துரை, ஒன்றியக் குழு உறுப்பினா்கள், ஊராட்சி மன்ற தலைவா்கள், துணைத் தலைவா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

ஷிகர் தவானுக்கு மறுமணம்..! 40 வயதில் ஐரீஷ் காதலியைக் கரம்பிடித்தார்!

பாஜகவில் இணைந்த அசாம் காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர்!

SCROLL FOR NEXT