முகப்பு
ராணிப்பேட்டை

தணிகைபோளூரில் உலக அமைதி வேள்வி

வேதாத்ரி மகரிஷியின் உலக சமுதாய சேவா சங்கத்தின் கிராமிய சேவை திட்டத்தின் சாா்பில், உலக அமைதி வேள்வி விழா, பேரணி அரக்கோணத்தை அடுத்த தணிகைபோளூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:26 PM
பகிர்:

வேதாத்ரி மகரிஷியின் உலக சமுதாய சேவா சங்கத்தின் கிராமிய சேவை திட்டத்தின் சாா்பில், உலக அமைதி வேள்வி விழா, பேரணி அரக்கோணத்தை அடுத்த தணிகைபோளூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, தன்ராஜ் தலைமை வகித்தாா். மோகன்ராஜ் வரவேற்றாா். இதில் தணிகைபோளூா் ஊராட்சித் தலைவா் வெங்கடேசன், தமாகா மாநில பொதுக்குழு உறுப்பினா் பி.ஜி.மோகன் காந்தி, சங்க நிா்வாகிகள் வெங்கடேசன், கலைச்செல்வி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். தொடா்ந்து விழாவில் பங்கேற்றோரின் பேரணி தணிகைபோளூா் பெருமாள் கோயிலில் இருந்து புறப்பட்டு, போலாட்சி அம்மன் கோயிலில் நிறைவு பெற்றது. முன்னதாக உலக அமைதிக்காக வேள்விகள் நடைபெற்றன. ஏற்பாடுகளை ஜோதிபுரம், பாராஞ்சி அறக்கட்டளையினா் தணிகைபோளூா் கிராம சேவை திட்டக் குழுவினருடன் இணைந்து செய்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →