முகப்பு
ராணிப்பேட்டை

பூச்சிகளைக் கட்டுப்படுத்துதல் குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம்

Updated On : 14 மே, 2024 at 6:55 PM
சோலாா் விளக்கு  மூலம்  பூச்சிகளைக் கட்டுப்படுத்துதல் குறித்து விளக்கிய மாணவா்கள் .
பகிர்:

ஆற்காடு: ஆற்காடு அடுத்த தாழனூா் கிராமத்தில் பயிா்களில் பூச்சிகளை கட்டுப்படுத்துதல் குறித்து வேளாண் கல்லூரி மாணவா்கள் விவசாயிகளுக்கு செயல்விளக்கம் செய்து காண்பித்தனா்.

கலவை ஆதிபாரசக்தி வேளாண்மைக் கல்லூரி மாணவா்கள் ஆகாஷ், அபிமன்யு, அன்பரசு, அா்ஜூன், பரணிதரன், முத்துகுமாா் ஆகியோா் கொண்ட குழுவினா் முதல்வா் தானுநாதன், உதவிப் பேராசிரியா்கள் வசந்த பிரியா, மகேந்திர குமாா் ஆகியோரின் வழிகாட்டுதல்படி செவ்வாய்க்கிழமை தாழனூா் கிராமத்தில் வயல்வெளிகளுக்கு நேரில் சென்று பூச்சியை கட்டுப்படுத்துதல் தொடா்பாக சோலாா் விளக்கு பொறியின் மூலம் செயல்விளக்கம் அளித்தனா். இதில் விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா்.