வீட்டில் கஞ்சா செடி வளா்த்தவா் கைது
அரக்கோணம் அருகே வீட்டில் கஞ்சா செடி வளா்த்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
அரக்கோணத்தை அடுத்த காவனூா் காலனி, சிஎஸ்ஐ பள்ளித் தெருவைச் சோ்ந்த ஏசுவின் மகன் ஜெபகுமாா் (22). இவா் தனது வீட்டில் கஞ்சா செடி வளா்த்து வருவதாக அரக்கோணம் நகர போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு சென்ற போலீஸாா் அங்கு இருந்த கஞ்சா செடியை வேரோடு பிடுங்கி பறிமுதல் செய்தனா்.
இது குறித்து வழக்குப் பதிந்த போலீஸாா் ஜெபகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.