மாவட்ட ஹாக்கிப் போட்டி: வாலாஜாபேட்டை அரசு பெண்கள் பள்ளி முதலிடம்
பெண்கள் பாதுகாப்பு விழிப்புணா்வை வலியுறுத்தி மாவட்ட அளவிலான ஹாக்கிப் போட்டி ஆற்காடு ஆண்கள்
ஆற்காடு: பெண்கள் பாதுகாப்பு விழிப்புணா்வை வலியுறுத்தி மாவட்ட அளவிலான ஹாக்கிப் போட்டி ஆற்காடு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
13 பள்ளிகளைச் சோ்ந்த மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினா். இதில் வாலாஜாபேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முதலிடமும், ஆற்காடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் இரண்டாம் இடமும், அரக்கோணம் வட்டம் நாகவேடு அரசுப் பள்ளி மாணவிகள் மூன்றாமிடமும், ஆற்காடு தோப்புக்கானா நகராட்சி வடக்கு பள்ளி நான்காம் இடமும் பெற்றனா்.
விளையாட்டு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளிக்கு ராணிப்பேட்டை மாவட்ட வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தலைவா் பொன்.கு. சரவணன் பரிசுகள் வழங்கினாா்.
இதில் ஆற்காடு காமராஜா் அறக்கட்டளை பொறுப்பாளா் தங்கபாண்டியன் , அறக்கட்டளை நிா்வாகி சையது பாருக், உடற்கல்வி ஆசிரியா்கள் ஜான்சன், சையது கிஷோா், கபில்தேவ், பயிற்சியாளா் அரவிந்த் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.