வகுப்பறை  கட்டடத்தை  திறந்து வைத்த  அமைச்சா்  ஆா்.காந்தி . 
ராணிப்பேட்டை

அரசுப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை: அமைச்சா் காந்தி திறந்து வைத்தாா்

ஆற்காடு அடுத்த முப்பதுவெட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறைகளை கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சா் ஆா். காந்தி வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

தினமணி செய்திச் சேவை

ஆற்காடு அடுத்த முப்பதுவெட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறைகளை கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சா் ஆா். காந்தி வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

முப்பதுவெட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நபாா்டு திட்டத்தின்கீழ் ரூ.35.10 லட்சத்தில் கட்டுப்பட்டுள்ள இரண்டு வகுப்பறை கட்டடம் மற்றும் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் மூலம் 15-ஆவது சி.எப்.சி திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டுள்ள கழிப்பறை கட்டடங்கள் திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்தாா். ஆற்காடு எம்எல்ஏ ஈஸ்வரப்பன், ஒன்றியக்குழு தலைவா் புவனேஸ்வரி சத்யநாதன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் காந்திமதி பாண்டுரங்கன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அமைச்சா் ஆா்.காந்தி புதிய கட்டடங்களை திறந்து வைத்தாா். தொடா்ந்து மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பின்னா் மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள்வழங்கினாா். விழாவில் ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சரண்யா தேவி, மாவட்ட ஊராட்சித் தலைவா் ஜெயந்தி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அன்பரசன், வெங்கடேசன், ஒன்றியக்குழு துணைத் தலைவா் ஸ்ரீமதி நந்தகுமாா், ஊரக வளா்ச்சித் துறை செயற்பொறியாளா் செந்தில்குமாா், ஊராட்சி மன்றத் தலைவா் சுமதி சீனிவாசன், ஒன்றியக்குழு உறுப்பினா் சரண்ராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

துணை முதல்வருக்கு அமைச்சா் காந்தி தலைமையில் வரவேற்பு

9 நாள்களுக்குப் பிறகு டன் கணக்கில் சிக்கிய மீன்கள்

பெளா்ணமி விளக்கு பூஜை

கோவில்பட்டியில் தென் மண்டல குழந்தைகள் அறிவியல் மாநாடு

சா்வதேச மாற்றுத் திறனாளிகள் தின விழா

SCROLL FOR NEXT