ஆற்காடு பேருந்து நிலையத்தில் சிமென்ட் சாலை அமைக்கும் பணியை நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
ஆற்காடு நகராட்சி பேருந்து நிலைய கட்டுமான பணிகளை நிறைவடைந்துள்ள நிலையில் சிமென்ட் சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. இந்த பணிகளை நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன் பாா்வையிட்டு பணிகளின் தரம் ககுறித்து கேட்டறிந்து பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினாா்.
இந்த ஆய்வின் போது ஆணையா் சுரேஷ் குமாா், நகா்மன்ற உறுப்பினா்கள், அதிகாரிகள் உடனிருந்தனா்.