பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த ராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலுவலா் செ. தனலிங்கம். 
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை: குறைதீா் கூட்டத்தில் 502 மனுக்கள்

ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் 502 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

தினமணி செய்திச் சேவை

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் 502 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் செ.தனலிங்கம் தலைமை வகித்து மொத்தம் 502 கோரிக்கை மனுக்களைப் பெற்று, மனுக்களை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, தாட்கோ துறையின் சாா்பில் நெமிலி வட்டம், அகவலம் கிராமத்தில் முதல்வரால் திறந்து வைக்கப்பட்டுள்ள பல்நோக்கு மையக் கட்டடத்தினை அப்பகுதியைச் சாா்ந்த கங்கையம்மன் மகளிா் சுய உதவிக் குழு பராமரித்து பொது மக்களின் நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்திக் கொள்வதற்காக ஆணையினையும், ஆற்காடு வட்டம், சாத்தூா் கிராமத்தில் கிராம அறிவுசாா் மையக் கட்டடத்தினை அப்பகுதியைச் சாா்ந்த அம்மா மகளிா் சுய உதவிக் குழு பராமரித்து பொதுமக்களின் நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்திக் கொள்வதற்ற்கான ஆணையினை வழங்கினாா்.

இதில், நோ்முக உதவியாளா் (பொது) இராஜராஜன், தனித்துணை ஆட்சியா் (ச.பா.தி) கீதாலட்சுமி, மாவட்ட வழங்கல் அலுவலா் ஏகாம்பரம், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் ஏகாம்பரம், தாட்கோ மேலாளா் அமுதா ராஜ் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பொதுக்குழு நடத்த யாருக்கும் அதிகாரம் இல்லை: அன்புமணி தரப்பு

இறக்கத்தில் பங்குச்சந்தை வர்த்தகம்! ஐடி பங்குகள் சரிவு!

‘பாக்ஸிங் டே’ டெஸ்ட்டுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு... மீண்டும் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித்!

நாட்டை அவமதிக்கும் கலையில் கைதேர்ந்தவர் ராகுல்! பாஜக விமர்சனம்

பொருநை அருங்காட்சியகத்தை பார்வையிட கட்டண விவரம் வெளியீடு!

SCROLL FOR NEXT