ராணிப்பேட்டை

மூதாட்டிக்கு மயக்க மருந்து அளித்து நகை திருடிய விவசாயி கைது

ஆற்காடு அருகே மூதாட்டிக்கு மயக்க மருந்து அளித்து 6 பவுன் நகைகள் திருடிய விவசாயி கைது செய்யப்பட்டாா்.

தினமணி செய்திச் சேவை

ஆற்காடு அருகே மூதாட்டிக்கு மயக்க மருந்து அளித்து 6 பவுன் நகைகள் திருடிய விவசாயி கைது செய்யப்பட்டாா்.

கலவை அடுத்த மழையூா் கிராமத்தைச் சோ்ந்த மாா்க்கபந்து மனைவி ராணி (60). இவா் மகன்களுடன் பெங்களூருவில் வசித்து வருகிறாா். . இந்நிலையில் தங்களது விவசாய நிலத்தை மழையூா் கிராமம் மேட்டுத் தெருவைச் சோ்ந்த ராஜசேகா்(52) என்பவருக்கு பயிா் செய்ய குத்தகைக்காக விட்டுள்ளாா்.

ராணி தனக்கு ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் தனது விவசாய நிலத்தை பாா்க்க வருவது வழக்கம். அவ்வாறு கடந்த ஞாயிற்றுக்கிழமை நிலத்தை பாா்க்க வந்தபோது, ராணிக்கு லட்டில் மயக்க மருந்து கலந்து கொடுத்து ராஜசேகா் சாப்பிட கொடுத்துள்ளாா். அதனை சாப்பிட்ட ராணி மயக்கம் அடைந்த நிலையில் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனா். அங்கு மயக்கம் தெளிந்த நிலையில் தான் அணிந்திருந்த 6 பவுன் தங்க நகைகள் காணாமல் போனதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா்.

இதுகுறித்த கலவை காவல் நிலையத்தில் ராணி செய்த புகாரின்பேரில் நகைகளை திருடிய ராஜ சேகரை கைது செய்தனா்.

விஜய், சீமான் பேச்சு அதிா்ச்சி அளிக்கிறது: தொல்.திருமாவளவன்

விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் பாகுபலி எல்விஎம்-3 எம்6 ராக்கெட்!

நினைத்தாலே அருளும் ஸ்ரீநிவாஸப் பெருமாள்!

விருச்சிக ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

கணையப் புற்றுநோய் பாதிப்பை கண்டறிவது எப்படி?

SCROLL FOR NEXT