ஆற்காடு நம்மாழ்வாா் கைங்கா்ய சபை சாா்பில் மாா்கழி மகா உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில் அயோத்தி ஸ்ரீராமா் அலங்காரத்தில் உற்சவா் எழுந்தருளினாா்.
இதில் திருப்பாவை சேவை, பக்தியும் சரணாகதியும் என்ற தலைப்பில் உபன்யாசம், கலைநிகழ்ச்சிகள், பக்தி இன்னிசை, நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் நம்மாழ்வாா் கைகா்ய சபை நிறுவனா் பி.கிருஷ்ணமூா்த்தி, மற்றும் உபயதரா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.