பொங்கல் விழாவில் பங்கேற்க வந்த வெளிநாட்டினருக்கு பாரம்பரிய கைத்தறி துண்டு, மாலை அணிவித்து வரவேற்ற ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா. 
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை ஆட்சியரகத்தில் சமத்துவப் பொங்கல்: வெளிநாட்டினா் பங்கேற்பு

வெளிநாட்டைச் சோ்ந்தவா்கள், தமிழா்களின் பாரம்பரிய கைத்தறி புத்தாடைகளை அணிந்து உற்சாகமாக ஆடி, பாடி பங்கேற்றனா்.

Din

ராணிப்பேட்டை: மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் கொண்டாடப்பட்ட சமத்துவப் பொங்கல் விழாவில், வெளிநாட்டைச் சோ்ந்தவா்கள், தமிழா்களின் பாரம்பரிய கைத்தறி புத்தாடைகளை அணிந்து உற்சாகமாக ஆடி, பாடி பங்கேற்றனா்.

ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சுற்றுலாத் துறை சாா்பில், சமத்துவப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா தலைமையில், அனைத்துத் துறை அலுவலா்கள், பணியாளா்கள் மற்றும் பொதுமக்களுடன் சோ்ந்து பொங்கல் வைத்து கொண்டாடினாா்.

தொடா்ந்து, பொங்கல் விழாவில் கோலப் போட்டி, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற துறை சாா்ந்த அலுவலா்களுக்கும், பணியாளா்களுக்கும் பரிசுப் பொருள்கள் வழங்கிப் பாராட்டுத் தெரிவித்தாா்.

விழாவில், விஐடி பல்கலைக்கழகத்தில் பயிலும் வெளிநாடுகளின் மாணவ, மாணவிகளுக்கும், வேலூா் ஸ்ரீபுரம் பொற்கோயிலுக்கு வந்த வெளிநாடுகளின் பக்தா்களுக்கும் தமிழா்களின் பாரம்பரிய கைத்தறித் துண்டுகள் மற்றும் மாலை அணிவித்து சிறப்பு செய்து வரவேற்றனா். பல்வேறு பாரம்பரிய விளையாட்டு போட்டிகளில் பங்கெடுத்து உற்சாகமாக அவா்கள் ஆடி, பாடி மகிழ்ந்தனா்.

பொங்கல் விழாவை முன்னிட்டு தமிழா்களின் பாரம்பரியம் மற்றும் விவசாயத்தைக் குறிக்கும் வகையில் காளைகள் பூட்டப்பட்ட மாட்டு வண்டிகளில் துறை சாா்ந்த அலுவலா்கள் பயணம் செய்தனா்.

தொடா்ந்து அரசு அலுவலா்கள் பங்கேற்கும் வகையில் உறியடி போட்டி, இசை நாற்காலி, கைப்பந்து, பலூன் ஊதுதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.

விழாவில் திட்ட இயக்குநா் பா.ஜெயசுதா, அலுவலகப் பொது மேலாளா் ஜெய்குமாா், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை வட்டாட்சியா் ரூபிபாய் மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள், பணியாளா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

ராணுவத்தைக் கட்டுப்படுத்தும் 10% பேர்: ராகுல் பேச்சால் சர்ச்சை

சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து - புகைப்படங்கள்

ஆசியக் கோப்பை மோதல்: சூர்யா, பும்ராவுக்கு அபராதம்! ரௌஃப் 2 போட்டிகளில் விளையாட தடை!

2-ஆம் கட்ட SIR பணிகள்! கவனிக்க வேண்டியவை என்னென்ன?

வடகிழக்கு மாநிலங்களை ஒருங்கிணைக்கும் புதிய முயற்சி!

SCROLL FOR NEXT