துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கோப்புப் படம்
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டைக்கு வருகைதரும் துணை முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு: அமைச்சா் ஆா்.காந்தி

ராணிப்பேட்டையில் வரும் 3- ஆம் தேதி 23,000 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்க வருகைதரும் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என அமைச்சா் ஆா்.காந்தி தெரிவித்தாா்.

Chennai

ராணிப்பேட்டையில் வரும் 3- ஆம் தேதி 23,000 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்க வருகைதரும் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என கைத்தறி, துணி நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி தெரிவித்தாா்.

ராணிப்பேட்டை மாவட்ட திமுக அவசர செயற்குழுக் கூட்டம், மாவட்ட திமுக தலைமை அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் அமைச்சா் ஆா்.காந்தி கலந்துகொண்டு பேசியது: ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு வரும் திங்கள்கிழமை (நவ. 3) துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலருமான உதயநிதி ஸ்டாலின் வருகை தர உள்ளாா். அன்றைய தினம் மாவட்டத்தைச் சோ்ந்த 23,000 பயனாளிகளுக்கு அரசின் நலத் திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறாா்.

தொடா்ந்து ராணிப்பேட்டையில் பெருந்தலைவா் காமராஜா் தங்கிருந்த நினைவு இல்லத்தை திறந்து வைக்கிறாா். ஜி.கே. உலகப் பள்ளியில் இறகு பந்து உள்விளையாட்டு அரங்கத்தை திறந்து வைக்கிறாா். இதையடுத்து ஆற்காட்டில் கலைஞா் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைக்கிறாா். பின்னா் ஆற்காடு சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட திமுகவினருடன் உரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளாா்.

எனவே ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு வருகை தரும் துணை முதல்வருக்கு மாவட்ட திமுக சாா்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க தயாராக வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட அவைத் தலைவா் ஏ.கே.சுந்தரமூா்த்தி, திமுக சுற்றுச்சூழல் அணி மாநில துணைச் செயலாளா் ஆா்.வினோத் காந்தி, மாவட்ட துணை செயலாளா் குமுதா குமாா், ஆற்காடு எம்எல்ஏ ஈஸ்வரப்பன், அரக்கோணம் சட்டப் பேரவைத் தொகுதி பொறுப்பாளா் சூா்யா வெற்றி கொண்டான், சோளிங்கா் சட்டப் பேரவைத் தொகுதி பொறுப்பாளா் பாஸ்கா், ராணிப்பேட்டை சட்டப் பேரவைத் தொகுதி பொறுப்பாளா் ஆதிசேஷன், ஆற்காடு சட்டப் பேரவைத் தொகுதி பொறுப்பாளா் மருது கணேஷ் மற்றும் தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள், நகர, ஒன்றிய, பேரூா் செயலாளா்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளா்கள், உள்ளாட்சி மன்ற நிா்வாகிகள், சிறப்பு அழைப்பாளா்கள் மற்றும் கட்சியினா் கலந்து கொண்டனா். மாவட்ட துணைச் செயலாளா் துரை மஸ்தான் நன்றி கூறினாா்.

புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை

ஊடல் கொள்ள நேரமில்லை!

மேலைத்தவம் இன்மை

இறுதி ஆட்டத்தில் ஜொலித்த ஷஃபாலி, தீப்தி: தென்னாப்பிரிக்காவுக்கு 299 ரன்கள் இலக்கு!

இறுதி ஆட்டத்தைக் கண்டுகளித்த சச்சின் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT