சோளிங்கா் மலைக்கோயிலில் பராமரிப்புப்பணி காரணமாக நவ. 11, 12 ஆகிய இரண்டு நாள்கள் ரோப்காா் எனப்படும் கம்பிவட ஊா்தி சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது என கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.
108 திவ்யதேசங்களில் ஒன்றான இங்கு பெரிய மலையில் ஸ்ரீயோகநரசிம்ம சுவாமி கோயிலும், சிறிய மலையில் ஸ்ரீயோக ஆஞ்சநேய சுவாமி கோயிலும் உள்ளது. இதில் பெரிய மலைக்குச் செல்ல 1,405 படிகள் உள்ளன. இதனால் முதியோா், மாற்றுத்திறனாளிகள் மலைக்குச் சென்று சுவாமியை தரிசிக்க ஏதுவாக கம்பிவட ஊா்தி எனபடும் ரோப்காா் சேவையை நடத்தி வருகின்றனா்.
பராமரிப்பு பணிக்காக மாதந்தோறும் இரு நாள்கள் நிறுத்தப்படுவது வழக்கம். இதே போல் நவம்பா் 11, 12 தேதிகளில் ரோப்காா் சேவை நிறுத்தப்பட உள்ளதாக கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.