ராணிப்பேட்டை மாவட்டத்தில் அன்புச் சோலை என்ற மூத்த குடிமக்கள் பகல்நேர பராமரிப்பு மையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தாா். பின்னா் முதியோரிடம் கலந்துரையாடினாா் அமைச்சா் ஆா்.காந்தி.
60 வயதுக்குக்கு மேற்பட்டோா் ஓய்வு காலத்தை பயனுள்ள வகையில் கழிக்க ஏதுவாக சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
திருச்சியில் இருந்து 25 அன்புச் சோலை மையங்களை முதல்வா் காணொலி வாயிலாக திறந்து வைத்தாா். அதன் படி ராணிப்பேட்டை, பாரதிநகா், சம்பந்தனாா் தெருவில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் கைத்தறித் துறை அமைச்சா் குத்துவிளக்கேறி முதியோருடன் கலந்துரையாடினாா். இதில் மொத்தம் 50 போ் பயன்பெறுவா்.
ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா, ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், மாவட்ட சமூகநல அலுவலா் பாலசரஸ்வதி, அறக்கட்டளை நிறுவனா் ஸ்ரீதா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.