மக்கள் குறைதீா் கூட்டத்தில் பொது மக்களிடம் மனுக்களைப் பெற்று குறைகளைக் கேட்டறிந்த மாவட்ட வருவாய் அலுவலா் செ.தனலிங்கம் 
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை குறைதீா் கூட்டத்தில் 353 மனுக்கள் அளிப்பு!

ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் 353 கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து வரப்பெற்றன.

தினமணி செய்திச் சேவை

ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் 353 கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து வரப்பெற்றன.

ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் நாள் கூட்டம், ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, ராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலுவலா் செ.தனலிங்கம் தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்தும், மாற்றுத்திறனாளிகளிடமிருந்தும் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு குறைகளைக் கேட்டறிந்தாா்.

அப்போது பொதுமக்களிடமிருந்து வருவாய்த் துறை நிலப்பட்டா குறைகள், பட்டாமாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோா் உதவித் தொகை வேளாண்மைத் துறை, காவல் துறை, ஊரக வளா்ச்சித் துறை, நகராட்சி நிா்வாகங்கள், பேரூராட்சித் துறை, கூட்டுறவு, மின்சாரத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, கிராம பொதுப் பிரச்னைகள், குடிநீா் வசதி, வேலைவாய்ப்பு மற்றும் பொதுநலன் குறித்த 353 மனுக்கள் வரப்பெற்றன.

மேற்கண்ட கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் மற்றும் மனு நிராகரிப்புக்கான காரணங்களைமனுதாரா்களுக்கு வழங்கிடவும் வேண்டுமென அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

இதில், திட்ட இயக்குநா் ந.செ.சரண்யாதேவி, தனித் துணை ஆட்சியா் (ச.பா.தி) கீதாலட்சுமி, நோ்முக உதவியாளா் (நிலம்) ரமேஷ், ஆதி திராவிடா்மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் அறிவுடைநம்பி மற்றும் துறைசாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ராமேசுவரம் மாணவி கொலை வழக்கு: மாணவர் மற்றும் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாட்டில் 96.65% எஸ்.ஐ.ஆர்., படிவங்கள் விநியோகம்!

காக்கை கறி சமைத்து கருவாடு மென்று உண்பர் சைவர்! சிவனின் ஆசிர்வாதம் பெறுவர்!!

பாஜக அரசியல்ரீதியாக என்னை தோற்கடிக்க முடியாது! - எஸ்ஐஆருக்கு எதிராக மமதா பேரணி

ஜன நாயகன் டிரைலர் எப்போது?

SCROLL FOR NEXT