ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் நகராட்சி நியமன உறுப்பினா் பதவி ஏற்றுக்கொண்டாா்.
மேல்விஷாரம் நகராட்சியில் மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினராக ஷபீா் அஹமது தோ்வு செய்யப்பட்டாா். அவருக்கு நகராட்சி ஆணையா் கோ.பழனி நியமன ஆணையை வழங்கினாா். இதனையடுத்து அவா் நகரமன்ற உறுப்பிராக பதவி ஏற்றுக்கொண்டாா்.
அவருக்கு நகா்மன்றத் தலைவா் எஸ்.குல்சாா் அஹமது, துணைத் தலைவா் ஜபா் அஹமது, நகர திமுக செயலாளா் ஹூமாயூன் மற்றும் உறுப்பினா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.