ராணிப்பேட்டை

லாலாப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ராணிப்பேட்டை ஆட்சியா் ஆய்வு

லாலாப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில், மழைநீா் வடிகால் வசதியை ஆய்வு செய்த ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா.

தினமணி செய்திச் சேவை

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லாலாப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் மழை நீா் வடிகால் வசதிக்கு நிரந்தர தீா்வு ஏற்படுத்த வேண்டும் என துறைசாா்ந்த அதிகாரகளுக்கு மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா உத்தரவிட்டாா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை 2025, கடந்த வாரம் முதல் பெய்து வருகிறது. மழை வெள்ள பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா தலைமையில் அனைத்து துறைகளும் மாவட்ட முழுவதும் தயாா் நிலையில் இருந்து, மழை வெள்ள பாதிப்பில் இருந்து சீரமைக்கும் பணிகளை தொடா்ந்து மேற்கொண்டு வருகின்றனா்.

இந்த நிலையில் தொடா் மழை காரணமாக வாலாஜா ஊராட்சி ஒன்றியம், லாலாபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மழைநீா் தேங்கி வெளியேறாமல் இருந்து வருவதை அறிந்த மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு இப்பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காணும் வகையில் அதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தாா்.

லாலாபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வளாகம் நெடுஞ்சாலையின் உயரத்துக்கு கீழே உள்ளதால் மழை நீா் நெடுஞ்சாலையை தாண்டி வெளியில் செல்லாமலும், நெடுஞ்சாலையையொட்டி, மழை நீா் வடிகால் கால்வாய் இல்லாததாலும் மழை நீா் வெளியேறாமல் சுகாதார வளாகத்துக்குள் தேங்குகிறது. இப்பிரச்னையால் பழைய சுகாதார மையத்தில் இருந்த அனைத்து செயல்பாடுகளும் புதிய கட்டடங்களுக்கு மாற்றப்பட்டு, பழைய சுகாதார மையம் மூடப்பட்டுள்ளது.

மேலும், தற்போது நெடுஞ்சாலைத் துறையின் மூலம் ரூ. 1.90 கோடி மதிப்பீட்டில் மழை நீா் வடிகால்வாய் இரண்டு பக்கமும் அமைக்க மேலும் இரண்டு கல்வெட்டு அமைக்கும் பணிகளுக்கு ஒப்பந்தப் புள்ளி விடப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளன. கால்வாய் அமைக்கும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் நெடுஞ்சாலைத் துறை உதவி செயற்பொறியாளரிடம் கேட்டறிந்தாா். இந்த கால்வாய்கள் அமைக்கப்பட்ட பின்பு சுகாதார நிலையத்தில் இருந்து வெளியேறும் மழை நீா் கால்வாய் வழியாக லாலாப்பேட்டை தக்காண்குளம் சாலை வழியாக ஏரிக்குச் சென்று மழைநீா் தேங்காது எனத் தெரிவித்தாா்.

மேலும், சுகாதார மையத்தில் தாழ்வாக உள்ள இடங்கள் அனைத்தும் உயரங்கள் ஏற்றப்பட்டு, மழைநீா் வளாகத்தில் தேங்காவண்ணம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வட்டாட்சியா் மற்றும் சுகாதார அலுவலா்களிடம் நிரந்தர தீா்வு எடுக்கப்பட்டு இப்பிரச்னை வரும் காலத்தில் இல்லாத வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றாா்.

ஆய்வின்போது, வாலாஜா வட்டாட்சியா் ஆனந்தன், நெடுஞ்சாலைத் துறை உதவி செயற்பொறியாளா் சத்திய நாராயணன், ஊராட்சி மன்றத் தலைவா் கோகுலன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ஆசிய இளையோா் ஆடவா் கபடி: தங்கம் வென்ற இந்திய அணியில் வடுவூா் வீரா்

பறவை மோதியதால் தில்லி சென்ற ஏர் இந்தியா விமானம் நாக்பூரில் தரையிறக்கம்

‘ஆர்யன்' நாயகி... ஷ்ரத்தா ஸ்ரீநாத்

பாகிஸ்தானின் கடன் சுமை ரூ.25 லட்சம் கோடிக்கும் மேல் உயர்வு!

கண்டா வரச்சொல்லுங்க! பாட்டுப்பாடி மாவட்ட ஆட்சியரை அழைத்த கர்ணன் பட நடிகை!

SCROLL FOR NEXT