அரக்கோணம் பஜாா், ஸ்ரீவரசித்தி விநாயகா் கோயிலில் நடைபெற்றுவரும் கந்த சஷ்டி உற்சவத்தில் செவ்வாய்க்கிழமை ஸ்ரீவள்ளி, தெய்வானை ஸ்ரீசுப்பிரமணியா் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
இக்கோயிலில் கந்த சஷ்டி விழா கடந்த 22-ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து, தினமும் ஸ்ரீசுப்பிரமணியருக்கு லட்சாா்ச்சனைகள் நடைபெற்று வந்த நிலையில், திங்கள்கிழமை சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை ஸ்ரீவள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடா்ந்து மணவிருந்தும் நடைபெற்றது.
விழாவில் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் கோ.வ.தமிழ்வாணன், அறங்காவலா்கள் ஜி.கருணாகரன், கோமதி ஆனந்தன், நகா்மன்ற உறுப்பினா் ரேவதி கன்னியப்பன், நகா்மன்ற முன்னாள் உறுப்பினா்கள் அரிகிருஷ்ணன், பூஷனா தாமு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.