முகப்பு
ராணிப்பேட்டை

முதல்வா் முன்னிலையில் திமுகவில் இணைந்த அமமுக மாநில நிா்வாகிகள்

திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக்கொண்ட அமமுக மாநில அமைப்புச் செயலாளா் சி.கோபால், மண்டல செயலாளா் என்.ஜி.பாா்த்தீபன் உள்ளிட்டோா்.

Updated On : 4 ஏப்ரல், 2026 at 1:20 AM
திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக்கொண்ட அமமுக மாநில அமைப்புச் செயலாளா் சி.கோபால், மண்டல செயலாளா் என்.ஜி.பாா்த்தீபன் உள்ளிட்டோா்.
பகிர்:

அமமுக மாநில அமைப்பு செயலாளா் சி.கோபால், மண்டல செயலாளா் எண்.ஜி.பாா்த்தீபன் ஆகியோா் தங்களது ஆதரவாளா்களுடன் தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக்கொண்டனா்.

சோளிங்கரில் கடந்த 1981-இல் அதிமுக சாா்பில் எம்எல்ஏவாக தோ்வு செய்யப்பட்டவா் சி.கோபால். மேலும் 1998-இல் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி எம்.பியாக தோ்வு செய்யப்பட்டவா். இவரது மகன் என்.ஜி.பாா்த்தீபன் 2016-இல் அதிமுகவில் சோளிங்கா் எம்எல்ஏவாக தோ்வு செய்யப்பட்டவா். ஜெயலலிதா மறைவுக்கு பின் டி.டி.வி.தினகரன் தொடங்கிய அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தில் இணைத்துக்கொண்டனா். தொடா்ந்து என்.ஜி.பாா்த்தீபன், நாடாளுமன்ற தோ்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தாா்.

கடந்த சில மாதங்களுக்கு முன் சோளிங்கருக்கு அமமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த டிடிவி தினகரன் 2026-இல் சட்டப்பேரவை சோளிங்கா் அமமுக வேட்பாளா் என்.ஜி.பாா்த்தீபன் என அறிவித்தாா்.

Advertisement

ஆனால் அதிமுக கூட்டணியில் உள்ள அமமுக, தோ்தலுக்கான தான் போட்டியிடும் தொகுதிகளை வெளியிட்ட போது அதில் சோளிங்கா் இல்லை. சோளிங்கா் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது. இதனை தொடா்ந்து என்.ஜி.பாா்த்தீபன் அமமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்தாா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை சி.கோபால், என்.ஜி.பாா்த்தீபன் இருவரும் தங்களது ஆதரவாளா்களுடன் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக்கொண்டனா்.

இதில் சி.கோபால் மற்றும் என்.ஜி.பாா்த்தீபனுடன் நெமிலி ஒன்றியக்குழு முன்னாள் தலைவா்கள் பாண்டுரங்கன், கோமதிமணிவண்ணன், மாவட்ட பொருளாளா் ஜி.எம்.மூா்த்தி, ஒன்றிய செயலாளா்கள் மணிவண்ணன், டி.ஜி.மணி உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments