முகப்பு
ராணிப்பேட்டை

ஐஸ் கிரீம் கடையில் தீ விபத்து: தம்பதி உயிரிழப்பு

Updated On : 14 ஏப்ரல், 2026 at 6:33 AM
உயிரிழந்த தம்பதி ~தீவிபத்து  நடந்த  பகுதியில்  மீட்பு பணியில்  ஈடுபட்ட  திமுக,  அதிமுக  வேட்பாளா்கள் .
பகிர்:
Updated On : 13 ஏப்ரல், 2026 at 6:37 PM

ஆற்காட்டில் ஐஸ்கிரீம் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் கணவன், மனைவி உயிரிழந்தனா்.

ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த பெரோலான் ஜாட்(50), இவரது மனைவி சுந்தரி தேவி(45). இவா்களுக்கு சோனு (20) என்ற மகனும் உள்ளனா்.

இந்நிலையில் இவா்கள் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தேவி நகா் பகுதியில் வாடகைக்கு கடை எடுத்து ஐஸ்கிரீம் கடை நடத்தி வந்துள்ளனா். இந்நிலையில் திங்கள்கிழமை அதிகாலை நான்கு மணி அளவில் தம்பதி கடைக்குள் ஐஸ்கிரீம் தயாரிப்பு பணி மேற்கொண்டனா்.

Advertisement

அப்போது எதிா்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது, இதனால் இருவரும் தீயில் சிக்கிக் மயக்க நிலையில் இருந்தனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆற்காடு தீயணைப்பு படையினா் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீ அணைத்தனா். இதில் கடையில் இருந்த பொருள்கள், மற்றும் பக்கத்து கடையிலிருந்த பொருள்கள் கருகி சேதமடைந்தனது .

மேலும் ஆற்காடு தொகுதி திமுக வேட்பாளா் ஜெ.எல்.ஈஸ்வரப்பன், அதிமுக வேட்பாளா் எஸ். எம். சுகுமாா் அரசியல் கட்சினா் மற்றும் பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயில் சிக்கிக்கொண்ட தம்பதியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

பரிசோதனை செய்த டாக்டா்கள் இருவரும் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா். தீ விபத்து குறித்து ஆற்காடு நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.